குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை முகநூலில் கேவலமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த பஜ்ரங்தள் உறுப்பினர் ஒருவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியைச் சேர்ந்த 24 வயதான ஸ்ரீஜித் ரவீந்திரன் (Sreejit Raveendran) என்பவர் வெளியிட்ட இந்த வீடியோ கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஷாஹீன்பாக் போராட்டக்காரர்களை ஆபாசமாக திட்டிய இந்த நபர், டிரம்ப் அமெரிக்காவிக்கு திரும்பிச் சென்ற பிறகு , அவர்கள் தொலைத்துக் கட்டப்படுவார்கள் என வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த வீடியோ குறித்து DYFI அமைப்பினர் அளித்த புகாரின் பேரில், மத நல்லிணக்கத்தை குலைக்கும் நோக்கில் செயல்பட்டதாக அவர் கைதாகி உள்ளார்.