சீனாவின் வூகான் நகரில் இருந்து 76 இந்தியர்கள் மற்றும் வங்காளம், மியான்மர், மாலத்தீவுகள், அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்த 36 வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படையின் விமானம் டெல்லி வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களை திரும்ப அழைத்து வர ஒத்துழைப்பு அளித்த சீன அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இந்தியர்கள் 14 நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியர்களை வூகானில் இருந்து அழைத்து வர இந்திய விமானப்படையின் போயிங் சி 17 விமானம் நேற்று சுமார் 15 டன் மருந்துகளுடன் டெல்லியில் இருந்து சீனாவுக்கு சென்றது. கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் சீனாவுக்கு இந்தியா அனுப்பிய மருந்துகளை ஒப்படைத்துவிட்டு, அங்குள்ள இந்தியர்களுடன் இந்த விமானம் இன்று டெல்லிக்கு திரும்பியது.