அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து திரும்பியதையடுத்து இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மிகப்பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தமது இரண்டுநாள் இந்திய பயணம் மகத்தானது என்றும், மோடி வலிமைமிகுந்த தலைவர் எனவும் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் டெல்லியில் செய்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஜெய்சங்கர், இந்தியா அமெரிக்கா இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளும் சுமுகமான முறையில் தொடர்வதாக தெரிவித்தார்.
எரி சக்தி துறையில் இந்த உறவு புதிய ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார். அமெரிக்காவில் இருந்து அதிகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு இந்தியாவுக்கு கிடைத்து வருவதாகவும் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா நிலக்கரியை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.