உத்தரபிரதேசத்தில் கிராம நிர்வாகம் அளித்த இறப்பு குறித்து சான்றளிக்கும் கடிதத்தில் ஒளிமயமான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உன்னாவ் மாவட்டத்திலுள்ள சிர்வாரியா எனும் கிராமத்தில், நோய்வாய்ப்பட்டிருந்த லக்மி ஷங்கர் என்பவர் கடந்த ஜனவரி 22ம் தேதி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது மகன் இறப்பு சான்றிதழுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், அதற்காக கிராம தலைவர் பாபுலால் சான்றளிக்கும் கடிதம் ஒன்றை அளித்திருந்தார்.
அதில் லக்மி ஷங்கரின் இறப்பை உறுதி செய்ததோடு, ஒளிமயமான எதிர்காலத்துக்காக வாழ்த்துகள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
கைப்பட எழுதப்பட்ட அந்த கடிதம் இணையத்தில் வைரலானதை அடுத்து, தனது தவறுக்காக மன்னிப்பு கேட்ட பாபுலால் புதிய கடிதத்தையும் வழங்கியுள்ளார்.