உத்திரப்பிரதேசத்தில் உள்ள கிங்ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகத்தில் இலகுவாக இருக்கும் செயற்கை கால்களை உருவாக்கி உள்ளனர்.
விபத்துகளில் சிக்கி கால்களை இழந்தவர்கள் மீண்டும் நடக்க உதவிகரமாக இருப்பது செயற்கைகால்கள். பொதுவாக செயற்கை கால்கள் அணிபவர்கள் அதிக எடை காரணமாக பல சிக்கல்களை சந்திக்கின்றனர். சிறிது இலகுவாக இருக்கும் செயற்கை கால்கள் அவர்களுக்கு வலி, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைகழகத்தில் எடைகுறைந்த இலகுவான, நீண்டகாலம் தாங்கும் செயற்கைகால்களை உருவாக்கி உள்ளனர். தெர்மோசெட்டிங் எனும் முறையில் தயாரிக்கப்படும் செயற்கை கால்களில் உறுதித் தன்மைக்காக பருத்தி மற்றும் கண்ணாடி இழைகளால் நிரப்பபடும்.
ஆனால் அப்படி தயாரிக்கப்டும் செயற்கை கால்கள் ஒரு வருடத்திற்கு மேல் தாங்குவதில்லை. மேலும் எடை அதிகமாக இருப்பதாலும் அதை பயன்படுத்துபவர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த பிரச்சனையை போக்கும் வகையில் தற்போது புதிய முறையில் செயற்கை கால்களை கண்டுபிடித்து உள்ளனர்.
இது குறித்து பல்கலைகழகத்தின் நிர்வாகி ஷாகுன் சிங், கூறுகையில் செயற்கைகால்களை தயாரிப்பதற்காக நாங்கள் தெர்மோசெட்டிங் பிளாஸ்டிக்கிலிருந்து பொலிப்ரோபிலின் பிளாஸ்டிக்கிற்கு மாறி தயாரித்தோம் அதிலிருந்து தயாரிக்கப்படும் செயற்கை கால்கள் இலகுவாகவும் நீண்ட காலம் நிலைத்து இருக்கும் என்பதால் நோயாளிகளுக்கு அணிவதில் சிரமம் இருக்காது, மேலும் செயற்கை கால்களில் ஏற்படும் உடைப்பு, அதனால் நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்களை தடுக்கலாம் என கூறினார்.