கோவை வெள்ளியங்கிரியைப் போன்று, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டத்தில் உள்ள நந்தி மலை அடிவாரத்திலும்,சத்குரு ஜக்கி வாசுதேவின் சர்வதேச யோகா மையம் வர உள்ளதாக, அம்மாநில மருத்துவக் கல்வித் துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பெங்களூரு வந்த சத்குரு ஜக்கி வாசுதேவிடம் விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை அவர் ஏற்றுக் கொண்டதாக அவர் கூறியுள்ளார்.
இதற்காக நந்தி மலைக்கு அருகே அகாலகுர்க்கி (Agalagurki )கிராமத்தில் 300 முதல் 400 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று கூறிய சுதாகர், விரைவில் இதற்கு கர்நாடக மாநில அரசின் ஒப்புதல் பெறப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சிக்கபல்லபூர், சத்குரு ஜக்கி வாசுதேவின் தாயாரின் ஊர் என்பதால், அவரத்து மனதிற்கு பிடித்த இடமாகவும் இருக்கும் எனவும் அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.