சீனாவில் வூகான் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்களில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்களை அழைத்து வருவதற்காக இந்திய விமானப்படையின் மிகப்பெரிய சி 17 போயிங் விமானம் சீனாவுக்கு நிவாரணப் பொருட்கள் , மருந்துகளுடன் இன்று புறப்பட்டுச் செல்கிறது.
இந்த விமானத்திற்கு சீனா அனுமதியளிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மருந்துகள் ஏற்றப்பட்டு காசியாபாத்தில் உள்ள ஹில்டன் விமான நிலையத்தில் இந்த விமானம் காத்திருந்தது. சீனாவின் அனுமதி கிடைத்ததையடுத்து இன்று இந்த விமானம் இந்தியர்களை அழைத்து வர செல்கிறது.
இதே போன்று வூகான் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களுக்கு நோய் பாதிப்பு இல்லை என்று உறுதிசெய்த பின்னர் சொந்த நாடுகளுக்குத் திரும்பலாம் என்று சீன அரசு அனுமதியளித்துள்ளது.