உச்சநீதிமன்றத்தின் 6 நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் பன்றிக்காயச்சல் பரவியுள்ளது.
இதனால் அந்த 5 நீதிபதிகளும் பணிகளை கவனிக்க முடியவில்லை. இதில் இரண்டு நீதிபதிகள் சபரிமலை பெண்கள் அனுமதி வழக்கு உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் 9 நீதிபதிகளின் அமர்வில் இடம் பெற்றவர்கள்.
ஒரே நேரத்தில் 6 நீதிபதிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து இதர நீதிபதிகளுக்கும் பன்றிக்காய்ச்சல் பீதி பரவியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவை சந்தித்து தங்கள் சகாக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எடுத்துரைத்து சுகாதார ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு முக கவசம், தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.