காவிரி டெல்டா பகுதிகளில் புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பங்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம், கடந்த செப்டம்பர் மாதம் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.
இந்த நிலையில் தமிழக அரசு காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவித்து அதற்கான சட்டத்தையும் நிறைவேற்றியது. அதன் அடிப்படையில் புதிய ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் ஆய்வுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்துள்ளது