உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள தலைநகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
அதிக மாசு உள்ள 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளதாக ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. ஐ.க்யூ ஏர் ஏர்விஷூவல்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகில் காற்றுமாசு அதிகமுள்ள நகரமாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத் உள்ளது.
இதற்கு அடுத்த இடங்கள் சீனாவின் ஹோடன் நகரத்துக்கும், பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா மற்றும் பைசலாபாத் நகரங்களுக்கும் கிடைத்துள்ளது. 5வது இடம் டெல்லிக்கு கிடைத்துள்ளது.
உலகில் 30 நகரங்கள் காற்றுமாசு அதிகமுள்ள நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளன. காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் வங்கதேசம் முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 2ம் இடம், மங்கோலியா 3ம் இடம், ஆப்கானிஸ்தான் 4ம் இடம், இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது.