ஜம்மு-காஷ்மீரில், 2ஜி மொபைல் இணைய சேவை, அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்தாண்டு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, பாகிஸ்தானின் சதித்திட்டங்களை முறியடிக்கும் வகையிலும், பிரிவினைவாதிகள், வன்முறைக்கான ஒருங்கிணைப்பை இணையவழியாக மேற்கொள்வதைத் தடுக்கும் வகையிலும், ஜம்மு-காஷ்மீரில், இணையதள சேவை முடக்கப்பட்டது.
பின்னர், காஷ்மீரில், இயல்பு நிலை திரும்பியிருப்பதை அடுத்து, இணையதள சேவை முடக்க, சில வாரங்களுக்கு முன்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
இருப்பினும், அதிவேக இணைய சேவை வழங்கப்படவில்லை. 2ஜி இணையசேவை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த இணைய சேவையை, வருகிற 4ஆம் தேதி ஜம்மு-காஷ்மீர் அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.