டெல்லியில் நடைபெற்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், மேகதாது அணை கட்டும் கர்நாடகத்தின் முயற்சிகளுக்கு தமிழக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் சார்பாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டார். காவிரி நீர் திறப்பு, பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்தின் செயல்கள் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அதை விவாதப் பொருளாகவே எடுத்துக் கொள்ளக்கூடாது என தமிழகம் வலியுறுத்தியது.
தொடர்ந்து காவிரி நதி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம், அக்குழுவின் தலைவர் நவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக திருச்சி மண்டல தலைமை பொறியாளர், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர், உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.