மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடுகளை 21 முறை கண்டுபிடித்த தமிழக இளைஞர் சுரேஷ் செல்லதுரை என்பவருக்கு நன்றி தெரிவிப்பதாக அதன் சி.இ.ஓ. சத்ய நாதெள்ள கூறியுள்ளார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள அவர் இன்று பெங்களூருவில் தொழில்நுட்ப முதலீட்டாளர் சந்திப்பில் பேசினார். கடந்த 2018 முதல் மைக்ரோசாப்டில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்து அதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து பரிசுத் தொகை பெற்ற முதல் மூன்று நபர்களில் 21 வயதான சுரேஷ் செல்லதுரையும் ஒருவர்.
அதே போன்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 13 வயது சிறுமி நம்யா ஜோஷிக்கும் (Namya Joshi) சத்ய நாதெள்ள நன்றி தெரிவித்துள்ளார். நம்யா ஜோஷி,மைக்ரோசாப்டின் மைன்கிராப்ட் (Minecraft) வீடியோகேம் மற்றும் ஸ்கைப் (Skype) செயலியைப் பயன்படுத்தி, சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் ஆவார்.