இந்திய பொருளாதார வளர்ச்சி, கடந்த ஆண்டின் கடைசி காலாண்டில் 4.7 சதவீதம் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டில் ஜூலை-ஆகஸ்ட் செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்து 4.5 சதவீதமாக இருந்தது. அதற்கடுத்த காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாக உயர்ந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
42 பொருளாதார வல்லுநர்களிடம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த கணிப்பு வெளியாகியுள்ளது. ஊரக பகுதிகளில் தேவை அதிகரிப்பு, தனியார் நுகர்வு அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சி அதிகரிப்புக்கு காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. அடுத்த 6 மாதங்களில் வளர்ச்சி வேகமெடுக்கும் என 42 பொருளாதார வல்லுநர்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.