அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மனைவி மெலனியா டெல்லியிலுள்ள அரசுப் பள்ளியை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
நானாக்புரா பகுதியிலுள்ள சர்வோதயா மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற மெலானியாவுக்கு, பாரம்பரிய உடையணிந்த பள்ளிக் குழந்தைகள் பூங்கொத்து கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் திலகமிட்டும் வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து மழலையர் வகுப்பை பார்வையிட்ட அவர், அங்கிருந்த குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் திறந்தவெளியில் மாணவர்கள் யோகா செய்யும் மகிழ்ச்சி வகுப்பினையும் பார்வையிட்டார்.