Maruti Suzuki நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Vitara Brezza (விட்டார பிரெஸ்ஸா) கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம், Vitara Brezza பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் நிறைவு பெற்ற Auto Expo 2020-ல் Maruti Suzuki நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட Vitara Brezza காரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. Vitara Brezza 2016-ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட போது டீசல் என்ஜினுடன் மட்டுமே வந்தது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி-யாக இருக்கிறது Vitara Brezza. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக Maruti Suzuki நிறுவனம் கூறியுள்ளது. இதனால் இந்த காரில் பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விருப்பத்தை பூர்த்தி செய்து விற்பனைக்கு வந்துள்ளது Vitara Brezza . 2020 Maruti Suzuki Vitara Brezza காரில் புதிய குரோம் கிரில் மற்றும் திருத்தப்பட்ட பம்பர் உள்ளிட்டவை அடங்கும்.
புதிய Maruti Suzuki Vitara Brezza மூன்று dual-tone வண்ணங்களில் கிடைக்கும். Sizzling Red with Midnight Black roof, Torque Blue with midnight Black roof, Granite Grey with Orange roof உள்ளிட்ட நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.1.5 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வந்துள்ளது Vitara Brezza.
இந்த காரில் டாப்-எண்ட் வேரியண்ட்டை தேர்வு செய்தால், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோ டிம்மிங் ஐ.ஆர்.வி.எம், லெதர் போர்த்தப்பட்ட ஸ்டீயரிங், டிரைவர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் தானியங்கி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்ட பல வசதிகள் கிடைக்கும். புதிய Vitara Brezza-வின் துவக்க வேரியண்ட் விலை ரூ.7.34 லட்சம், டாப் வேரியண்ட் Vitara Brezza-ன் விலை ரூ.11.40 லட்சம் ஆகும்.