உச்சநீதிமன்ற நீதிபதிகள் 6 பேர், பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்ற அறையில் இன்று இந்த தகவலை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வெளியிட்டார்.
அப்போது அவர், 6 நீதிபதிகளும் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டேவை சந்தித்து, வைரஸ் பாதிப்பு குறித்து தெரிவித்து, தங்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடுகளை செய்வது குறித்து ஆலோசிக்குமாறு கேட்டுக் கொண்டதாக குறிப்பிட்டார்.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடும்படி உத்தரவிடுமாறு தலைமை நீதிபதியிடம் தாம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இதுகுறித்து விவாதிக்க வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்துக்கு தலைமை நீதிபதி அழைப்பு விடுத்திருப்பதாகவும் நீதிபதி சந்திராசூட் கூறினார்.