அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், தான் வந்த பிரம்மாண்ட விமானத்தை தவிர்த்து, அதைவிட சிறிய விமானத்தில், ஆக்ரா சென்றது ஏன் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து, அகமதாபாத்திற்கு, "பறக்கும் ஓவல் அலுவலகம்" என்ற அடைமொழியோடு அழைக்கப்படும், ஏர்போர்ஸ் ஒன் (Boeing 747-200B) என்ற பிரம்மாண்ட விமானத்தில் வந்தார். பின்னர், அகதாபாத்திலிருந்து தாஜ்மஹாலை சுற்றிபார்க்க ஏதுவாக ஆக்ராவிற்கு பயணமானார்.
ஆனால், தான் வழக்கமாக பயணிக்கும் பிரம்மாண்ட விமானத்தில் செல்லாமல், அதைவிட சிறிய விமானத்தில் டிரம்ப் பயணமானார். டிரம்ப் வழக்கமாகச் செல்லும் பிரம்மாண்ட விமானம், ஆக்ராவில் இறங்கி-ஏற போதிய வசதிகள் இல்லை என்பதால், அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான, போயிங்-757 ரக, சி-32 விமானத்தில் பயணமானார்.