பாஸ்டேக் பயன்பாடு தொடர்பாக 18 லட்சம் பேரிடமிருந்து, 20 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடிகளில் விரைவாக கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்டேக் முறை கடந்த ஜனவரி 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதற்காக சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் பயன்படுத்துவோருக்கு தனி வழியும், சாதாரண முறையில் சுங்க கட்டணம் செலுத்துவோருக்கு தனி வழியும் உள்ளது.
இதில் பாஸ்டேக் வழியில் தவறுதலாக வரும் சாதாரண முறையில் சுங்க கட்டணம் செலுத்தும் வாகனங்களுக்கு, அபராதமாக இருமடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதன்படி இந்தியா முழுவதும் இதுவரை 18 லட்சம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து, 20 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.