சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை பயன்படுத்துவோரின் ((tobacco consumption)) வயது வரம்பை 18லிருந்து 21ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் 18 வயது நிரம்பியோர் மட்டுமே புகையிலை பொருள்களை பயன்படுத்துவது சட்டரீதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, அந்த வயது வரம்பை 21ஆக அதிகரிக்க வேண்டும், பொது இடங்களில் விதியை மீறி புகைபிடிக்கும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை அளித்துள்ளது.
இந்த பரிந்துரைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், விரைவில் அதுதொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் செய்து அமல்படுத்தப்பட இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.