மும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவனான ரவி புஜாரி, தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட புஜாரி, சோட்டா ராஜனுடன் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டான். திரைப்பட இயக்குநர் மகேஷ் பட்டிடம் பணம் கேட்டு மிரட்டியது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 20 ஆண்டுகளாக அவனை போலீஸார் தேடி வந்தனர்.
பர்கினோ பாசோ நாட்டின் பாஸ்போர்ட் உடன் அந்தோனி பெர்னான்டஸ் என்ற புதிய அடையாளத்துடன் இருந்த அவனை, கடந்த ஆண்டு செனகல் போலீஸார் கைது செய்தனர்.
இருப்பினும் ஜாமீனில் வந்து தப்பியோடிய அவனை தென்னாப்பிரிக்காவில் நேற்று அதிகாலை அந்நாட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். இதையடுத்து விசாரணைக்காக ரவி புஜாரியை இந்தியா கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.