பொருளாதார நெருக்கடியைத் தவிர்க்க உலகளாவிய கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்துமாறு ஜி 20 மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரியுள்ளார்.
இத்தகையை பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கான ஒரு கொள்கை ரீதியான ஒத்துழைப்புக்கு வாய்ப்பை உருவாக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
ரியாத்தில் நடைபெற்ற ஜி 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளுடைய ஆளுநர்களின் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன் பெண்கள், சிறு மற்றும் குறு வியாபாரிகள் பயன்படும் வகையில் கடன்களை வழங்குமாறும் அனைவருக்கும் பலனளிக்கும் வகையிலும் அனைவரும் எளிதாக அணுகக்கூடிய வகைகளிலும் வங்கிகள் செயல்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.