பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்த்தார்பூர் செல்பவர்கள் ஒரே நாளில் தீவிரவாதிகளாக மாறி இந்தியா திரும்புகின்றனர் என்று பஞ்சாப் மாநில டிஜிபி தினகர் குப்தா தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இதையடுத்து, அவர் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், தமது கருத்து தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். கர்த்தார்பூர் புனிதப் பயணத்தால், நாட்டின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுந்திருப்பதை தாம் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்துள்ளார்.
குருநானக் தேவின் போதனைகளை பின்பற்றி வருவதாக கூறியுள்ளார். இந்த புனிதத் தலத்தை தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்றே தாம் எச்சரித்ததாகவும் பஞ்சாப் டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.