கோவாவில் போர்ச்சுகீசியர்களின் வருகையைக் குறிக்கும் 450ஆவது ஆண்டை முன்னிட்டு இந்த ஆண்டும் வழக்கம் போல் வண்ணத் திருவிழா களை கட்டத் தொடங்கியுள்ளது.
பனாஜியில் நேற்றிரவு பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. பேண்டு வாத்தியக் குழுவினர், நடனக்கலைஞர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்நாட்டு கலைக்குழுவினர் பெருமளவில் திரண்டனர். பல வண்ண அலங்கார அணிவகுப்புகளும் நடைபெற்றன.
கத்தோலிக்க கிறித்துவர்கள் இத்திருவிழாவின் போது விரதம் இருந்து வழிபாடுகள் செய்வார்கள். ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக இத்திருவிழா நடைபெறுவது வழக்கம். பனாஜி மட்டுமின்றி வாஸ்கோ, மாபுசா , மாருகோ உள்ளிட்ட பகுதிகளிலும் இத்திருவிழா அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்