பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரை அவருடைய இல்லத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜே.பி.நட்டா நிகழ்த்திய சந்திப்பின் மூலம், பீகாரில் உள்ள எதிர்க்கட்சிகள் கலங்கிப் போயிருப்பதாக துணை முதலமைச்சர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
243 இடங்கள் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ்குமாருடன் பாஜக கூட்டணி அமைக்க உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நிதிஷ்குமார்- நட்டா இடையே நடைபெற்றதாக சுஷில் குமார் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக் கூட்டணியின் ஒற்றுமையை கண்டு எதிர்க்கட்சியினர் கதிகலங்கிப் போயிருப்பதாகவும் சுஷில் மோடி கூறியுள்ளார்.