பிரதமர் மோடியின் 62வது வானொலி உரைத் தொடரான மன் கீ பாத் இன்று காலை 11 மணிக்கு ஒலிபரப்பாகிறது.
இந்த ஆண்டின் இரண்டாவது உரை இது. கடந்த முறை குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி மாலையில் மன் கீ பாத் ஒலிபரப்பானது.
ஜனநாயக அமைப்பில் வன்முறைக்கு இடமில்லை என்றும், பத்ம விருதுகள் மக்கள் விருதுகளாக மாறியுள்ளன என்றும் தமது முந்தைய மன் கீ பாத் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இன்றைய "மனதின் குரல்" ஒலிபரப்பை கேட்கத் தவறாதீர்கள் என்றும் தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார்.