திருப்பதியில் கண்ணாடி பாட்டில்களில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் கண்ணாடி பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் குடிநீர் விற்பனை செய்யும் திட்டத்தை திருப்பதி தேவஸ்தானம் கையில் எடுத்தது.
இந்நிலையில், கண்ணாடி பாட்டில்கள் எளிதில் உடைந்து விடும் அபாயமும், உடைந்த கண்ணாடி துண்டுகள் பக்தர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் கால்களில் குத்தி காயம் ஏற்படும் அபாயமும் இருப்பதால், இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.