டெல்லி அரசுப் பள்ளியைப் பார்வையிடும் மெலானியா டிரம்பின் நிகழ்ச்சிக்கு, முதலமைச்சர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்தியப் பயணத்தின்போது, மெலானியா டிரம்ப் தெற்கு தில்லியில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு சிறப்பு விருந்தினராகச் சென்று ஆம் ஆத்மி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட மகிழ்ச்சி வகுப்பைப் பார்வையிடவுள்ளார்.
இந்நிலையில், மெலானியா அந்த பள்ளிக்கு வரும் நிகழ்ச்சிக்கு அரவிந்த் கேஜரிவாலுக்கும், மணீஷ் சிசோடியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.