பிரதமர் மோடி பன்முகத் திறமை கொண்ட அறிவாளி, சர்வதேச அங்கீகாரம் பெற்ற தொலைநோக்கு சிந்தனையாளர் என உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா புகழ்ந்துள்ளார்.
2 நாள் சர்வதேச நீதித்துறை கருத்தங்கின் தொடக்க விழா, டெல்லியில் உச்சநீதிமன்ற கூட்டரங்கில் தொடங்கியது. தொடக்க விழாவில் நீதிபதி அருண் மிஸ்ரா நன்றியுரை ஆற்றினார். காலாவதியாகிப் போன ஆயிரத்து 500 சட்டங்களை நீக்கியதை சுட்டிக்காட்டி, பிரதமர் மோடியையும், சட்டத்துறை அமைச்சரையும் அவர் புகழ்ந்துரைத்தார்.
பிரதமர் மோடியின் தலைமையில், சர்வதேச சமூகத்திற்கு உற்ற நண்பனாக இந்தியா திகழ்வதாக அருண்மிஸ்ரா கூறினார். பன்முகத் திறமை கொண்ட அறிவாளியும், உலக தரத்தில் சிந்தித்து, உள்நாட்டிற்காக பாடுபடும் தலைவருமான பிரதமர் மோடியின் பேச்சு, கருத்தரங்கிற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்ததாக அருண் மிஸ்ரா தெரிவித்தார்.