கர்நாடக மாநிலம் ஹம்பியில் உலகிலேயே மிகப்பெரிய ஹனுமான் சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சரயு நதிக்கரையில் ராமருக்கு 225 அடி உயரத்துக்கு பிரமாண்ட சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்தொடர்ச்சியாக, ராமர் சிலையை விட உயரத்தில் 10 அடி குறைவாக 215 அடி உயரத்துக்கு, ஹம்பியில் ஹனுமான் பிறந்த இடமாக நம்பப்படும் அஞ்சனாத்ரி மலையில் (Anjanadri Hill) சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹனுமான் ஜன்மபூமி தீர்த்தசேத்திர அறக்கட்டளை சார்பில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளதாகவும், அந்த சிலை முழுக்க முழுக்க செம்பு (copper) உலோகத்தால் அமைக்கப்பட உள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.