டெல்லி ரயில் நிலையத்தில் உடற்பயிற்சி செய்து இலவச நடைமேடை டிக்கெட் பெறும் முறை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இது தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உடற்பயிற்சியை ஊக்குவிக்கும் விதமாக ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் தனித்துவமான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்றை இணைத்திருந்தார்.
அதில், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதை சென்சார் மூலம் உணரும் இயந்திரம், 180 வினாடிகளில் 30 முறை அமர்ந்து எழுந்திருக்கும் நபருக்கு ஒரு இலவச நடைமேடை டிக்கெட்டை வழங்குகிறது.