உத்திரப்பிரதேசத்தின் இரண்டாவது பெரிய மாவட்டமான சோன்பத்ராவில் (Sonbhadra), 3,350 டன் எடை அளவுள்ள தங்க படிமங்கள் கொண்ட, இரண்டு சுரங்கங்கள் இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது.
இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் உத்திரப்பிரதேச புவியியல் மற்றும் சுரங்க இயக்குநரகம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சோன்பத்ரா மாவட்டத்தின் சோன்பாகதீ (Sonpahadi) என்ற இடத்தில் 2700 டன் அளவுள்ள தங்க படிமங்களும், ஹார்டீ (Hardi) என்ற பகுதியில் 650 டன் அளவுள்ள தங்க படிமங்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தியாவிடம் தற்போது, 626 டன் தங்கம் கையிருப்பு உள்ளது. உத்திரப்பிரதேசத்தில் கண்டறியப்பட்டுள்ள 3,350 டன் தங்கம் வெட்டியெடுக்கப்பட்டால், நாட்டின் தங்கம் கையிருப்பு 5 மடங்கு அதிகமாகும்.
தற்போதைய நிலையில், அமெரிக்காவிடம் 8133 டன்களும், ஜெர்மனியிடம் 3366 டன்னும், சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எஃப்-இடம் 2814 டன்னும் கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.