பாகிஸ்தான் ஆதரவு முழக்கமிட்ட இளம்பெண்ணுக்கு, நக்ஸலைட்டுகளுடன் தொடர்பிருப்பதாக கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில் அசாதுதீன் ஒவைஸி உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அப்போது அமுல்யா என்ற இளம்பெண், மேடையில் வந்து பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்டார்.
இதையடுத்து மேடையில் இருந்து அப்புறபடுத்தப்படுத்தி அவரை கைது செய்த போலீஸார், தேசத்துரோக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சிக்மகளூர் (Chikmagalur) அருகே உள்ள அமுல்யா வீட்டின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சில், கண்ணாடி ஜன்னல் உடைந்து சேதமடைந்தது. அமுல்யாவுக்கு நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அவருக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என்றும் எடியூரப்பா கூறியுள்ளார்.