பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் புதிய முறையைக் கையாள மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதில் குறிப்பாக வசதிபடைத்தவர்கள் பட்டியலில் சம்பளமும் கணக்கில் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இட ஒதுக்கீடு பெறும் தகுதிக்கான விண்ணப்பத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு தகுதியை நிர்ணயிக்க அவருடைய வருமானமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்ற நிபுணர்க் குழுவின் பரிந்துரையை சமூக நீதி அமைச்சகம் மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.
இது குறித்து விரைவில் மத்திய அரசு முடிவு எடுக்க உள்ள நிலையில், இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் பிற்படுத்தப்பட்டோரின் கடும் எதிர்ப்புக்கும் ஆளாகக் கூடும்.