கராச்சி செல்ல இருந்த சீனாவின் சரக்கு கப்பலை மடக்கிய இந்திய அதிகாரிகள் அதில் பேரழிவுக்கான ஆயுதங்கள் இருந்தனவா என சோதனையிட முடிவு செய்துள்ளனர்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டி.ஆர்.டி.ஓ. அதிகாரிகள் கப்பலில் இருந்து உள்ள பார்சல்களை சோதனையிட உள்ளனர். சீன சரக்குக் கப்பலில் ஏவுகணைக்கான வேதிப் பொருட்கள் பாகிஸ்தானுக்கு கொண்டு செல்லப்படுவதாக கடந்த 3ம் தேதி தகவல் வந்ததையடுத்து குஜராத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது அதிலிருந்த சந்தேகத்திற்குரிய சரக்கு பார்சல்கள் கைப்பற்றப்பட்டன. இதனை சோதனையிட்டு வேதிப்பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் கப்பலில் சரக்கு அனுப்பியவர், பெறுபவர் ஆகிய இருதரப்பினர் மீதும் சர்வதேச சட்டப்படி வழக்குத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.