ராமர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன் முதலாவது கூட்டம் நடைபெற்ற போது அதன் தலைவர் உள்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர்.
அறக்கட்டளையின் தலைவர் நிருத்ய கோபால் தாஸ், பொதுச்செயலாளர் சம்பத் ராய், பொருளாளர் சாமி கோவிந்த் தேவ் கிரி உள்ளிட்டோர் பிரதமருடன் ஆலோசனை நடத்தினர். நான்கு ஆண்டுகளில் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என்று அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.