நியூசிலாந்தில் வாழும் இந்தியர் ஒருவர், உயிரிழந்த தனது வளர்ப்பு நாயின் அஸ்தியை இந்தியா எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரமோத் குமார் என்ற அவர், பீகார் மாநிலம் புர்னியாவை பூர்வீகமாக கொண்டவராவார். நியுசிலாந்தின் ஆக்லாந்தில் 40 ஆண்டுகளாக வாழும் அவர், 10 ஆண்டுகளாக லைகான் எனும் நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் அண்மையில் உயிரிழந்ததையடுத்து இந்து மத சம்பிரதாயப்படி இறுதிசடங்கு செய்தார்.
பின்னர் அஸ்தியை நியூசிலாந்தில் இருந்து பீகார் எடுத்து வந்து கங்கை நதியில் கரைத்தார். இதேபோல் கயாவிலும் பின்ட தானம் (pind daan) அவர் செய்தார்.