உத்தரபிரதேசத்தில் பொதுத்தேர்வில் முறைகேட்டில் ஈடுபடுவது குறித்து மாணவர்களுக்கு யோசனை கூறிய தனியார் பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்கிழமை முதல் அம்மாநிலத்தில் 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக மாவ் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளியொன்றில் மாணவர்களுக்கு தேர்வுக்கான அறிவுரைகளை வழங்கிய பள்ளி முதல்வர், தேர்வில் காப்பி அடிப்பது குறித்து யோசனைகளை வழங்கினார்.
விடை தெரியவில்லை எனில் விடைத்தாளில் 100 ரூபாயை வைத்து விட்டு வந்தால் ஆசிரியர்கள் மார்க் போட்டு விடுவார்கள் என்றும் கூறினார். இதனை அங்கிருந்த மாணவர் ஒருவர் படம்பிடிக்க, மேலும் சில மாணவர்களும் சேர்ந்து முதலமைச்சரின் குறைதீர்க்கும் இணையப்பக்கத்தில் பதிவிட்டு புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டார்.