2019-2020-ம் ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி அதிக அளவாக பதிவாகும் என்று மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய வேளாண்துறை, 2019-20 விவசாய ஆண்டில் பருவமழை சிறப்பாக பெய்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி, 291.95 மில்லியன் டன்களாக பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
2019-20-ம் ஆண்டிற்கான முக்கிய பயிர்கள் உற்பத்தியின் இரண்டாவது முன்கூட்டியே மதிப்பீட்டில், உணவு தானிய உற்பத்தி குறித்த மேற்கண்ட புள்ளிவிவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள முன்கூட்டியே மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி 291.95 மில்லியன் டன்களாக பதிவாகியுள்ளது. இது 2018-19 ஆம் விவசாய ஆண்டில் எட்டப்பட்ட இலக்கான 285.21 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தியை விட 6.74 மில்லியன் டன் அதிகம். எனினும் இந்த உற்பத்தி முந்தைய ஐந்தாண்டுகளை விட (2013-14 முதல் 2017-18 வரை) 26.20 மில்லியன் டன்கள் அதிகம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-20 ஆம் ஆண்டில் மொத்த அரிசி உற்பத்தி 117.47 மில்லியன் டன்கள்,கோதுமை உற்பத்தி 106.21 மில்லியன் டன்கள், மொத்த பருப்பு வகைகளின் உற்பத்தி 23.02 மில்லியன் டன்கள், மொத்த கரும்பு உற்பத்தி 353.85 மில்லியன் டன்கள், பருத்தியின் உற்பத்தி 28.04 மில்லியன் பேல்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல சோயாபீனுடன் சேர்த்து மொத்த எண்ணெய் வித்து உற்பத்தி 13.63 மெட்ரிட்டாகவும், ராப்சீட் மற்றும் கடுகு 9.11 மெட்ரிட்டாகவும் 34.19 மெட்ரிட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிலக்கடலை உற்பத்தி 8.24 மெட்ரிக் என மதிப்பிடப்பட்டுள்ளது