மகாராஷ்டிராவில், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவுஆகியவற்றை, கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மற்றும் தேசியவாத காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தபோதும், அவற்றை ஆதரிப்பதிலும், உறுதியாக அமல்படுத்தப்படுத்துவதிலும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே திட்டவட்டமாக இருக்கிறார்.
மகாராஷ்டிராவில், தேசிய மக்கள்தொகை பதிவேட்டை அமல்படுத்துவதற்கு தடையில்லை என்றும், அது ஒரு வழக்கமான மக்கள் தொகை கணக்கெடுப்புப் போன்றது தான் என்றும், உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மேலும், குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி, யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றும், அதனால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, தேசிய மக்கள்தொகை பதிவால், யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பதில், சிவசேனா உறுதியாக இருப்பதாகவும், உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.