கேரள மாநிலத்தில் 6 மாவட்டங்களுக்கு வெயில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரளாவில், நடப்பாண்டு கால நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு, கோடை காலம்போல வெயில் சுட்டெரித்துவருகிறது. வனப்பகுதிகளில் மரங்கள் காய்ந்து, பல இடங்களில் காட்டுத்தீயும் பரவி வருகிறது.
பகல் நேரங்களில் வெளியில் செல்லும் பொதுமக்கள், வெயில் காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும் ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 6 மாவட்ட மக்களுக்கு வெயில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.