டெல்லியில் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் 14 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பு முடிந்து வெளியே வந்துள்ள முதல் குழுவினர், பிக்பாஸ் வீட்டில் தங்கியது போன்ற அனுபவம் வாய்த்ததாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து வூகானிலிருந்த 406 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்டு வரப்பட்டு, டெல்லி அருகில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப்படை முகாம்களில் மருத்துவக் கண்காணிப்பில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கண்காணிப்பு முடிந்து வெளியே வந்த மருத்துவ மாணவி ஒருவர், முகாமில் புது மனிதர்களுடன் தங்கியிருந்த அனுபவம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல் இருந்ததாக தெரிவித்தார். மேலும் நாள்தோறும் காலையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், பாதுகாப்புப்படை வீரர்கள் தங்கள் சொந்த குழந்தைகள் போல் கவனித்துக் கொண்டதாகவும் கூறினார்.