குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விமர்சிப்பவர்கள் அரசியல் நோக்கத்தால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் தெரிவித்துள்ளார்.
பிரசல்சில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பேசிய அவர், அதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றம் மற்றும் அகதிகள் மறுகுடியேற்றக் கொள்கைகளுடன் ஒப்பிட்டு பேசினார்.
மேலும் இந்தியாவின் அண்டை நாடுகள் பலவும் இஸ்லாமிய சமய சார்புடைய நாடுகள் என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெய்ஷங்கர், அந்த நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வரும் சிறுபான்மையின மக்களுக்கு இந்தியா ஆதரவு அளித்து வரவேற்பதாக கூறினார்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg