முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போராட்டங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்கும் முறை நாடு முழுவதும் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான தேசிய தானியங்கி முக அடையாள கண்டுபிடிப்பு முறை என்ற தரவுத் திரட்டை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, அதற்கான ஒப்பந்தங்களை சம்பந்தப்பட்ட வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களிடம் இருந்து கோரியுள்ளது.
போராட்டங்களின் போது காவல்துறையினர் எடுக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணைக்கப்பட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எளிதில் அடையாளம் காணப்படுவர்.
முக அடையாள தொழில்நுட்பம் அமலுக்கு வந்தால் நாடு முழுவதும் காவல் துறையின் திறன் மேலும் அதிகரிக்கும் என்று இந்த திட்டத்தை முன்னெடுக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg