கொரானா வைரஸ் பாதிப்பினால் ஏற்பட்ட தாக்கம் குறித்து தொழில் மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரானா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவுடன், ஸ்மார்ட் போன், சோலார்செல்கள், டிவி, பொம்மை, பர்னிச்சர்கள், மின்னணு உபகரணங்கள், கார்கள் உட்பட இந்தியா பல்வேறு வர்த்தக தொடர்புகளை கொண்டுள்ளது.
ஏற்கனவே மோசமான நிலையில் உள்ள இந்தியப் பொருளாதாரம் சீனாவில் ஏற்பட்டுள்ள கொரானா பாதிப்பால் மேலும் பாதிக்கப்படக் கூடும் எனக் கருதப்படுகிறது.
இதன் காரணமாக தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களுடன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்தும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்திய தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில் கொரானா பாதிப்பின் தாக்கம் குறித்த மதிப்பீடுகளை மேற்கொள்ள உள்ளார்.