பஞ்சாப் மாநிலத்தில் எரிந்துகொண்டிருந்த பள்ளி வாகனத்தில் இருந்து 4 சிறுவர்களை மீட்ட சிறுமிக்கு அம்மாநில அரசு துணிச்சலுக்கான விருதை அறிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை சங்ரூர் நகரில் ஒரு பள்ளி வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அதில் இருந்த 4 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். 8 மாணவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டனர்.
அப்போது எரியும் நெருப்புக்கிடையே 4 மாணவர்களை துணிச்சலுடன் மீட்ட சிறுமி அமன்தீப் கவுருக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில் அமன்தீப்புக்கு துணிச்சலுக்கான விருதை அறிவித்துள்ள முதலமைச்சர் அமரீந்தர் சிங், இந்த விருது சுதந்திர தினத்தன்று வழங்கப்படும் என்றும் சிறுமியின் படிப்புச் செலவை மாநில அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.