கனடாவில் படிக்க கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 39 ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அந்நாட்டின் குடியேற்றத்துறை ஒட்டுமொத்தமாக 4 லட்சம் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி அளித்த நிலையில், ஒரு லட்சத்து 39 ஆயிரம் இந்திய மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதன் மூலம் கனடா நாடு 2-வது ஆண்டாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக 21 சதவீதம் சீன மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் சீன மாணவர்களுக்கான அனுமதி விதிதம் குறைந்து வரும் நிலையில் இந்திய மாணவர்களுக்கான அனுமதி விகிதம் அதிகரித்து வருகிறது.