குஜராத்தில் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் வந்துள்ளதா என சோதனை செய்தது தொடர்பாக கல்லூரி முதல்வர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பூஜ் பகுதியில் உள்ள ஸ்ரீ சகஜானந்த் மகளிர் கல்லூரியில் மாதவிடாய் காலத்தின் போது மாணவிகள் கல்லூரி வளாகத்திலோ, உணவகத்திற்கு செல்லக்கூடாது என்றும் சக மாணவிகளை தொட்டுப் பேசக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்தக் கொடூரத்தின் உச்சகட்டமாக விடுதியில் இருந்த 68 மாணவிகளை உள்ளாடையைக் கழற்றவைத்து சோதனை நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக கல்லூரி முதல்வர் ரீட்டா ரணிங்கா மற்றும் விடுதி காப்பாளர் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரையும் அலுவலக உதவியாளர் ஒருவரையும் கல்லூரி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.