டோக்லம் படை குவிப்பின் போது சீன ராணுவத்தின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பி 81 ரக கடற்படை விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக முப்படைத் தலைவர் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
போயிங் நிறுவனத்தின் பாசிடன் 81 (Poseidon 8I) எனப்படும் பி 81 ரக நீர் மூழ்கி எதிர்ப்பு போர் விமானங்கள் கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட நிலையில் தற்போது 8 விமானங்கள் உள்ளன.
இந்த விமானங்களின் கண்காணிப்புத் தரவுகள் பதற்றமான நேரங்களில் சரியான முடிவுகளை எடுக்க உறுதுணையாக இருப்பதாகவும், நெருக்கடியான தருணங்களை சிறப்பாக எதிர்கொள்ள உதவியிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
டோக்லமில் மட்டுமன்றி புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும் பி 81 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.