ஜனநாயகத்தில், போராட்டத்தில் ஈடுபட யார் ஒருவருக்கும் உரிமை இருந்தாலும், அதற்காக, சாலைகளை மறித்துப் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.
டெல்லி ஷாகீன் பாக் (Shaheen Bagh) போராட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல் (Sanjay Kishan Kaul), கே.எம்.ஜோசப் (KM Joseph) அமர்வில், இன்று, விசாரணைக்கு வந்தது. எங்கே போராட்டம் நடத்த வேண்டும் என்ற கேள்வி எழும் அதே நேரத்தில், அதற்கான விடை, தெருக்கள் அல்ல., என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தங்கள் எண்ணங்களை, கருத்துகளை பிரதிபதிலிக்க ஜனநாயகம் உரிமை வழங்கினாலும், அதற்கு எல்லை உண்டு என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஒருவேளை, ஒவ்வொருவரும், சாலைகளை மறித்துப் போராடத் தொடங்கினால், அது எங்கு போய் முடியும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.